மூடநம்பிக்கை - கற்குவேல் பா

மூடநம்பிக்கை
``````````````````
குடும்ப நலன்வேண்டி
ஆறு தலைமுறைக்குமுன்
காவல் தெய்வத்திற்கு
பலியிட்ட ஆடுகளில்
இரண்டிலொன்று சரியாக
அறுபடவில்லையாம்

மீண்டும் இரண்டுவாங்கி
சரியாக பலிகொடுத்திட
கருமுட்டை துளைத்தே
உயிர்க்குமாம் விந்தணு
கிடைக்குமாம் பிள்ளைவரம்
ஜோதிடர் நேற்று கூறியது

ஒற்றை அரிவாள்வெட்டில்
இரண்டு துண்டாகும்
கச்சிதமான ஆடுகலேதும்
உங்களூரில் காணக்கிடைத்தால்
கொஞ்சம் சொல்லுங்களேன்
பலி கொடுத்தாகவேண்டும்

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (18-Aug-15, 12:17 pm)
பார்வை : 1150

மேலே