சாலைகளில் நான் இப்படி

சாலைகள் எங்கே தொடங்குகின்றன
முடிகின்றன யென்று எனக்கு தெரியாது
இருப்பினும் நான் தொடங்கும் முடியும்
இடமே சாலை யென்றானது
என் வரையறையில்..........

இப்படி நான் வகுத்து கொண்ட
சாலைகளில் யாரோ செய்த பாவத்தால்
பிச்சை யெடுக்கின்றான்
சில்லரை கேட்கும் சிறுவன்............

என்னில் இல்லாத ஒன்றை
என்னிடம் கேட்கும் போது
இருப்பதாய் நடிக்க வேண்டியிருக்கிறது
சட்டை பைகளில் தேடியப்படி......


பாரதி. செ

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (18-Aug-15, 6:04 pm)
பார்வை : 430

மேலே