கஜல் -14

காதலித்ததால் வாழ்க்கைத் தெர்வில் தேறி விட்டேன்
நான், சிறப்பு என்னும் கீதத்தை பாடி விட்டேன்

சொல்ல, சொல்ல நீ பண்பென்னும் பண்ணை மனத்தால்
இன்று நல்ல ஆளாய் தானாய் நான் மாறி விட்டேன்

உன்னுடன் இணைந்தே நான் பூரிப்பை அடைந்தேன்
கண்டு வாழ்த்த வெற்றி தெய்வத்தைக் கோரி விட்டேன்

நான் இருட்டுடன் போர் செய்யப் போகின்ற காலம்
வந்து விட்டதே பார் அன்பே பார் சீறி விட்டேன்

உன் நினைவுகள் பாதை ஒன்றைப் போட, தன்னால்
சென்று இன்று வாழ்வின் உச்சத்தில் ஏறி விட்டேன்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (18-Aug-15, 4:33 pm)
பார்வை : 83

மேலே