லட்ச்சியத் தவறு
தொழில்நுட்பங்கள் பல வளர்ந்து கொண்டே வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்துகொண்டிருக்கின்ற ஒரு விடயம்.அது ஒரு பக்கம் இருக்க நம் நாட்டு மக்களின் அறிவில் மறைந்து இருக்கின்ற சில விடயங்களும் உல்லது.”என் பிள்ளையை அது படிக்க வைய்க்கப் போறேன் அவன் பெரிய engineer ஆக போறான்” என மெச்சிக்கொள்ளும் சிலரைக் கண்டால் “அவர் பார்றா எவ்வளவு அறிவோட தன் பிள்ளைய எப்படியெல்லாம் ஆக்கனும்னு ப்ளான்(plan) பண்ணி வெச்சிருக்காரு” என பலர் அவர்களை புகழ்ந்து பூகம்பரம் செய்வார்கள்,ஆனால் அவர் எவ்வளவு தான் ப்ளான் போட்டு வைய்த்தாலும் அதை முதலில் எதிர்ப்பது அவரது பிள்ளையாகத் தான் இருக்கும். தெரிந்தோ! தெரியாமலோ!! சமூகத்தில் கல்வி என்பது அனைவரும் கற்க வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. கல்வி என்பது நாம் பிழைப்பதற்க்கான தனி துறையே! என்பதை அதிகப்படியானோர் அறிவதில்லை.கல்வியில்லையென்றால் சேர்த்து வைத்த பொருளுக்கு பாதுகாப்பே இல்லை என பலர் கூறினாலும்,அவனுக்கு தகுந்த திறமை இருந்தால் அனுபவப் பாடங்களின் மூலமும் சமூகத்தின் மூலமும் பொருளை எப்படி பாதுகாப்பாய் வைப்பது என்பதையும் மற்றும் அதை எப்படி மேம்படுத்துவது என்பதனையும் அறிந்திருப்பான்.
என்ன தான் தொலைக்காட்ச்சியில் சச்சினும், சானியாமிர்ஷா’வும் சாதனை செய்வதை பார்த்து கைத் தட்டினாலும் தன் பிள்ளையையும் அப்படி சாதனை செய்ய வைக்க வேண்டும் என பலர் நினைப்பதில்லை. தனது உறவினரோ அல்லது சமூகத்தில் யாராவது engineer’ஆகவோ அல்லது டாக்டராகவோ இருந்தால் தன் பிள்ளையையும் அப்படி ஆக்க வேண்டுமென்று நினைத்து அவனை படி, படி என படாத பாடு படுத்துகிறார்கள். எந்த வகையிலும் திறமையில்லாத மாணவனை அடித்து “படி” என கூறுவதில் தவறேயில்லை. நாம் வாழும் இவ்வுலகில் மற்ற துறைகளை ஒப்பிடும்போது கல்வி கற்று சம்பாதிப்பதே மிகவும் எளிதான ஒரு செயல்.
காலையில் ஃபுட்பால் ப்ராக்டிஸ் (football practice)’க்கு செல்லும் ஒருவனை “ஆ’னா ஊ’னா கிளம்பிடுறான் பால(bal) தூக்கிக்கிட்டு இவனுக்கு இது ஒண்ணு தான் கேடு” என பொழுது போக்காக வைத்துக்கொண்டு பேசும் பக்கத்து வீட்டுக்காரர் முதல், “இவன டெய்லி(daily) பாக்குறேன்டா இவன் படிகிறானா? இல்லையா?” என கண்ணுக்குத் தெரியாதவர்கள் வரை அனைவருமே அவனை எதிர்க்கிறார்கள். வெட்டியாக பேசிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை அவனது பெற்றோர்களிடமே ஏதாவது கூறி குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துவார்கள், அவனும் மிக இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான் மற்றும் அவனது லட்சியத்திற்க்கு அருகிலிருந்தும் ஒதுக்கி தள்ளப்படுகிறான்.
நான் பதினோறாம் வகுப்பு படிக்கும்போது முதல் நாளில் ஒவ்வொருவராக தங்களுக்கு என்ன லட்சியம் என்பதை வகுப்பாசிரியர் கூறச் சொன்னார். அனைவரும் ஒவ்வொருவராக ஏதோ ஒரு வேலையை சொன்னார்கள் அதில் கௌதம் என்ற மாணவன் மட்டும் வித்தியாசமாக டாக்டர் என சொன்னான். அவனை தவிர வேறு எவறுமே அந்த வேலையை கூறவில்லை காரணம் நாங்கள் எடுத்திருந்த துறை “கணினி அறிவியல்”. அன்று கௌதம் கூறிய பதிலைக் கேட்டு அனைவரும் நகைத்தோம் ஆனால் அதில் உள்ள உட்கருத்து எவரும் அறியத ஒன்று. தனக்கு பதினேழு வயதாகியும் தான் என்ன ஆக வேண்டும் என்பதை அறியாத கௌதம்’ஐப் போல் இன்றும் பலர் உள்ளனர். நாட்டில் பலர் தன் இருபதுக்கு மேலான வயதில்தான் தன் லட்சியம் எதுவென யோசிக்கிறார்கள்.
தான் என்ன ஆக வேண்டுமென்றே தெரியாத கௌதம்’ஐ அவனது பெற்றோர்கள் ஒரு துறையில் சேர்க்கிறார்கள், சிறு வயதிலிருந்து லட்சியம் வைத்துக்கொண்டு தினமும் ஃபுட்பால் ப்ராக்டிஸ்(football practice)’க்கு செல்பவனையும் தன் பெற்றோர் அதே துறையில்தான் சேர்க்கிறார்கள். இரு பெற்றோர்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லையே!. இன்றும் பலர் தனது வீட்டில் தேர்ந்தெடுத்த துறையை எதிர்த்துவிட்டு தனக்கு விருப்பமான துறையில் பெரிய ஆட்களாக உள்ளனர்.
மாணவர்களுக்கு பிடித்த துறையொன்று இருந்தால் அதை பெற்றோர்களுக்காகவும் சரி, சமூகத்திற்காகவும் சரி, யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாமே! அத்துறையில் நீங்கள் முழு ஈடுபாடோடு இருந்தீர்களானால் நிச்சயம் ஒருநாள் அத்துறையில் பெரிய ஆளாக இருப்பீர்கள் அன்று உங்களை வெறுத்து பேசிய அனைவருக்கும் உங்களுடன் பேச விருப்பம் வரும். ஆனால் எதற்க்காகவும் உங்களது பெற்றோரை விட்டுக்கொடுக்காதீர்கள்.
“பிள்ளைகளை தன் போக்கில் விடாமல் அவர்களது திறமையை வீணாக்குவது பெற்றோரின் தவறு,பெற்றோரை காரணமாகக் கொண்டு தன் திறமையை செயல் படுத்தாமல் இருப்பது பிள்ளையின் தவறு”
ஃபுட்பால் ப்ராக்டிஸ் (football practice)’க்கு போன அவன் ஒரு நாள் அத்துறையில் பெரிய ஆளாக இருந்தால் மெச்சிய பக்கத்து வீட்டுக்காரனும், கிண்டல் செய்த சில சமூகத்தினரும் “அவன டெய்லி பார்ப்பேன்டா அவனோட முழு முயற்ச்சிதான் இந்த அளவுக்கு அவன ஆளாக்கி இருக்கு” என பேச்சுகளை மாற்றி புகழாரம் சூட்டுவார்கள். ஆனால் அவனது லட்சியம் நிறைவேறவில்லையென்றால் “என் அப்பாக் கிட்ட எவ்வளவோ சொன்னேன்டா அவரு என்னை இந்த டிபார்ட்மென்ட்(department)’ல சேர்த்திட்டாரு” என கூறுவதுதான் தவறாக இருக்கும்.
சில சமயங்களில் நம்மில் பல பேர் இந்த பொய்யைத்தான் கூறிக்கொண்டிருக்கிறோம்.
-வெ.சந்தோஷ் ஹிமாத்ரி.