ஏன் இப்படி

காலம் காலமாய் நல்லோர்ருக்கு மத்தியில் தீயோரும் தீயோருக்கு மத்தியில் நல்லோரும் இருந்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் , நல்லோர்மட்டுமே இப்புவியில் வழ்ந்ததகாவும்இப்போதுதான் புதிதாக ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து தீயோர் வந்தது போலவும் எதற்க்கெடுத்தாலும் அலுப்புடன் பேசுவதும் அனைத்திற்கும் அலுத்துக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது . முள்ளோடுப்பூவும் பூக்களோடு முள்ளும் சாச்சியாக இருக்கின்றன இயற்கையில் . இது உலக இயல்பு என்றெண்ணி கண்முன் நடக்கவிருக்கும் தீமையை தடுத்தும் நம்மால் யாருக்கும் தீமை எர்ப்படாவண்ணம் நடப்பதை விடுத்து ஏன் இப்படி ??? தோழமைகால்
நாமெழுதும் வரிகள் பிறரைப்பாராட்டவும் , மற்றோருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருப்பது நல்லதுதானே நடுந்த்துவிட்ட தீமைகள் இனி நடக்கதப்படி தடுப்பதெப்படி விவாதிப்போம் அலசுவோம் விடைகண்டவுடன் பகிர்வோம் நட்புக்கும் உறவுக்கும் , கடந்துவிட்ட துன்பத்தை கிடைத்துவிட்ட அனுபவமாக ஏற்ப்போம் . எண்ணோம் போல் வாழ்க்கை , முன்னோர் கூற்று நாம் நல்லதையே எண்ணுவோம் நல்லதையே பேசுவோம் , நல்லதாகவே நடக்கும் அனைத்தும் . பிறர்வுற்ற துயர் குறித்து பேசுவது தவிர்த்து , அவர் தியார் போக்க செய்வதுயாதென சிந்திப்போம் .தவறு செய்வோரை தண்டிப்பதும் சரிதான் , அதுப்பற்றியதல்ல இது நம்மைப்பற்றியது . பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில் இருப்போர்கள் நல்லோர் போலவே தீயோரும் உள்ள உலகம் இதுவென சொல்லி வளர்ப்பது நன்று . அப்போதுதான் நம் பிள்ளைகள் நம் வழித்தொடர்வர். முள்பற்றி அறியா குழந்தை ரோஜாவை பறித்தால் வலியே மிஞ்சும் மாறாக முள்ளைக்கட்டிவிடுங்கள் அக்குழந்தை முள்ளில் சேதமுறாமல் பூவைக்கைகொள்ளும் .நம் குழந்தைக்கு எது சரியானப் பாதையென தேர்ந்தெடுப்போம். ......................

எழுதியவர் : ருத்யா / அரங்கமொழியால் (22-Aug-15, 10:34 pm)
சேர்த்தது : அரங்கமொழியாள்
Tanglish : aen ippati
பார்வை : 152

சிறந்த கட்டுரைகள்

மேலே