ஏக்கம்
அன்பே...
நினைவுகள் பல கோடி
கனவாகி மறைகிறது.!..
விழிகள் உனைத்தேடி
தோற்றது...
செவிகள் உன் குரல்
கேளாமல் தோற்றது...
செயலிழந்த நாவில்
வார்த்தைகள் தொலைந்துபோயின...
ஜீவனம் தேவையென்று
வயிறு கேட்டாலும்.
வாயிற்கும் வயிற்றுக்கும்
இடையில் ஏதோவொன்று
இடைமறிக்கிறது....
இன்று தான் பிறந்திருக்கும்- இந்த புற்றீசல்
எனைக்கண்டு ஏலனம் செய்கிறது....
உணர்விழந்து
உணர்ச்சியற்று
ஊனோடு உயிர் சுமந்து
உருக்குலைந்து நின்றேன்...
எங்கோ... யாரோ...
உன் பெயரை உச்சரிக்க
புதுனர்வுற்று எழுந்தேன்...
என்னவளே என்னுயிர்
நீயென்று அறிவாயோ.....