சன்னலோர கதை

சன்னலோர கதை



பயணம்.... நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி,அது நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள், சந்தோசங்கள் சிலவை காலடித்தடமாக பதிந்து செல்லும். ஒவ்வொரு பயணமும் நமக்கு ஒரு அனுபவத்தை பகிராமல் இருக்காது...அது தான் பயணித்தின் உண்மையே...அது சலிக்காமாக இருக்க இதுவும் ஒரு காரணியே

பயணம் பேருந்து, இரயில்,விமானம் இதை சார்ந்தும் மாறுபட்டாலும் அது நமக்கு கற்று கொடுப்பது ஒன்று மட்டும் தான், அது அனுபவம்.


நம் பயணத்தில் பங்கு பெரும் நபர்களை பொருத்தும் மறக்க முடியாத இன்ப துன்ப நிகழ்வுகளை பதிய செய்கிறது.

நம் பயணத்தை மேலும் ரசிக்க வைக்க ஒரு சன்னலோர இருக்கை போதும்.நாம் அனைவரும் இதேயே எதிர்பாக்கும் மனம் கொண்டவர்கள்.

பயணம் ஒரு ரசனை, கடந்தகாலத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும் கருவி.அது ஒரு தேடல், தேடல் எங்கே முடியுமோ நாமும் அங்கேயே நாம் தொலைகிறோம்.

ராம் மற்றும் பிரியா...இவர்களின் கதையும் பயணமும் பயணமும் சார்ந்த கதையே. இந்த இரு புள்ளிகளையும் இணைக்கும் கோடு தான் பயணம்.இந்த பயணம் இவர்களை எந்த தொலைவிற்கு நகர்த்தி சென்று இணைக்கும் என்பதை காலமும் , இந்த பயணமும் தீர்மானித்து உள்ளது.நாமும் இவரிகளின் பயணித்தில் அருகில் அமர்ந்து செல்வோம்.

பயணம் ஆரம்பம்

எழுதியவர் : srinivasan.amsaveni (28-Aug-15, 10:52 pm)
பார்வை : 215

மேலே