என் காதலர் ரொம்ப கஞ்சத்தமா இருக்காரு

என் காதலர் ரொம்ப கஞ்சத்தமா இருக்காரு
என்னாச்சு?
பீச்சுல பாதி சுண்டலை சாப்பிட்டு, மீதியை மணல்ல புதைச்சு வை நாளைக்கு எடுத்து சாப்பிடலாம்னு சொல்லாரு...!
சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.
டெலிஃபோன்ல வேலை செய்யற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்ன ஆச்சு?
all the lines are engaged..please try after some yearsனு சொல்லிட்டா.
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
கணவன் : நான் நெனைக்கிறேன் நம்ம பொண்ணு காதல்ல விழுந்துட்டான்னு.
மனைவி : எத வெச்சு சொல்லறீங்க ?
கணவன் : இப்ப எல்லாம் அவ (pocket money) கேக்குறதே இல்ல!!!.
டார்லிங் நம்ம கல்யாணம்?
சுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.
கலாவதியை காதலிச்சுட்டு இருந்தியே..அது என்னாச்சு
அது காலாவதி ஆயிடுச்சு
அங்க தாடியோட போறாரே..அவரை ஒரு காலத்தில நீ காதலிச்சயா?
நோ..நோ..நெவர்..தாடி வைச்ச யாரையும் நான் காதலிக்கலை
எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறே?
கணக்கு பண்ணிட்டு இருக்கேன்.
உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு
என்னவாம்?
பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டார்.

எழுதியவர் : பிதொஸ் கான் (30-Aug-15, 12:05 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 103

சிறந்த நகைச்சுவைகள்

மேலே