பூவுலகில் பேரழகி

தே.மு. க வின்
( தேவதைகள் முன்னேற்றகழகம் )
தலைவி அவள்

அன்னப்பறவையினத்தின்
அன்னை அவள்

சிட்டுக்குருவி இனத்தின்
அழியாத பட்டுக்குழந்தை அவள்

ஆண் இனத்தை அலை அலையாய்
அலையவைக்கும் வளைகடல் அவள்

அணிந்திருக்கும் தங்கத்தோடெல்லாம்
தகரமே அவள்
அங்கத்தோடு நிகர்நின்றால்

உலக அழகிப்போட்டியில்
கலந்துகொள்வதைவிட
உலக அமைதியையே
விரும்புகின்றவள்

வில்லை வளைத்தால்
அவளோடு மணமென்றால்
ஆயிரம் நியாயவிலைக்கடை
வரிசை அவள் வீட்டின் எதிரில்

அவள் கொலமிடத் தெளிக்கும்
நீரல்லவா ஞாலம்
சூடாவதை தடுக்கிறது

எழுதியவர் : குமார் (30-Aug-15, 8:39 pm)
Tanglish : boovulakil peralagi
பார்வை : 490

மேலே