காதல் பிரளயம்
சொன்ன வார்த்தையில்
பூகம்பம்,
சொல்லாத வார்த்தையில்
பிரளயம்.
காதல் முறிவு
ஆறாத வடு...
ஆற்றாமை காணாது
எனக்குள் கரைகிறேன்..
உணர்வு பார்வை
பரிவு எண்ணம் எழுத்து
எல்லாமாகிய
காதல் பட்டாசு
இன்று வெடித்து சிதற,
இணையுமென்று ஏங்கித்தவித்த
ஒவ்வொரு உணர்வும்
உடைந்து போன எழுத்துக்களாய்
இங்கே சிதறிக்கிடக்க
ஒவ்வொன்றிலும்
எனது இதயத்துகள்
எனை வெறித்து
எதிரொலிக்கிறது:
"வேண்டாமென்று
சொன்னேனடா"

