என் உயிர் இதயமே உனக்காக

இதய வலி உனக்கா?
என் இதயம் துடிதுடிக்கிறதே!

உனக்கான இதயம்
இறுதிவரை
இயம்புகிறது
உன் பெயரை...
என்னுள்

மடிதனில்
எந்தன் இதயம்
எனை ஏந்தும்
நிகழ்வினில்
இடைஞ்சல்கள்
இல்லாமல்
இறுக்கிட
வேண்டும்
இறைவா!
இந்த உயிரை...

இதயம் வலிக்கவில்லை
அடைக்கும் தருண வேளை.
ஆனால் உந்தன்
விரலை விட்டு
பிரியும்
அந்த நொடி
மரண வலி
தந்து விட்டு
போகிறது நெஞ்சில்...

இதய இயக்கம்
ஏறி இறங்குகிறது உன்னால்...
இறங்கி ஏறுகிறது
உனை எவரேனும்
காயப்படுத்தி விட்டால்...


இதயம் நொறுங்குகிறது
எனை நீ
விளையாட்டாய்
விட்டுக் கொடுத்தால் கூட...


அனுமனுக்கு
மார்பை பிளந்து
மானசீகனை
காண்பிக்க
மட்டுமே முடியும்
என்னால்
உனை
எந்த இடைவெளி
இருந்தாலும்
ஸ்பரிசிக்க முடியும்
எந்தன் இதயத்தில்...

வலி வரும்
வேளை தனில்
இதயத்தை
பிடித்துக் கொண்டு
விழுகிறேன்...
எங்கேயும்
இதயம்
இடித்துக் கொள்ளக்
கூடாது என்கிற
ஞாபகத்துடன்...

நான் சுவாசிக்கும்
காற்றில் பற்றாக்குறை
இருந்தாலும்
இதயத்திற்கு
முதலில்
செல்ல வேண்டும்
என் மூச்சு!
அங்கு தான்
இருக்கிறது
என் உயிர்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Sep-15, 8:29 am)
பார்வை : 243

மேலே