திருமணத்திற்கு பிறகும் நட்பு

தோழியே
யதார்த்தமாய் சந்தித்தோம்
நிலையான நட்பிற்கு
அடித்தளம் இட்டோம்
ஒன்றாய் பகிர்ந்தோம்
சிரித்தோம் துக்கித்தோம்
ஒருவருக்கொருவர்
ஆறுதலாய் இருந்தோம்

எதிர் பாராத ஒரு நாளில்
உன் வாழ்க்கை துணையுடன்
என் முன் வந்து நின்றாய்

ஒருபக்கம்
அளவில்லா ஆனந்தம் என்னுள்
மறுபக்கம் நம் நட்பு முற்று பெற்றதோ என்ற அய்யம்

ஐயோ என்று வருந்தி நின்ற பொழுது
உன் வாழ்க்கை துணையை என்னுடன்
அறிமுகம் செய்து
என்னுடன் நட்பாக்கி
நம் நட்பிற்கு
வலிமை சேர்க்கும்
புது அங்கீகாரத்தை தந்தாய்

எழுதியவர் : jonesponseelan (1-Sep-15, 4:29 pm)
பார்வை : 155

மேலே