நடுநிலையாளர் சியாமளா ராஜசேகர்

எழுத்து தளத்தின்
நடு நிலையாளர் திருமதி சியாமளா ராஜசேகர்
அவர்களுக்காக இந்த பதிவு .........
*************************************************************************

எழுத்து நடை மேடையில்
வெண்பா படைத்து
சான்றோர் ஆனீர் !!!!

அக அன்பால்
அனைத்து கவிஞர்களுக்கும்
அன்னையானீர்!!!!!

மனதில் உறுதி
எழுத்தில் இனிமை
நடையில் வீரியம்
தந்தது உமக்கு
தரமான
நடுநிலையாளர் பதவியை ....

விழுவதெல்லாம்
எழுவதற்கே தவிர
அழுவதற்கல்ல என
ஆணித்தரமான
கொள்கையோடு
வெற்றி நடை போட்டீர் !!!

எழுத்துக்களில்
தேன் தொட்டு
சித்திரம் வரைந்தீர்
உம்மை நீர்
நேசித்ததால் !!

கவலைகள்
வெற்றி தருவதில்லை
முயற்சிகள் தான் என
முயற்சியை முன் வைத்து
முதன்மையானீர் !!!

அன்பால்
பண்பால்
படைப்பால்
சக எழுத்தாளர்களை
சிறை வைத்து
ஆயுள் கைதியாக்கினீர் !!!

புத்தகங்கள்
இல்லையெனில்
சரித்திரம்
மௌனமாகிவிடும்
இலக்கியம்
ஊமையாகி விடும்

அது போல்
சியமளா ராஜசேகர்
இல்லையெனில்
எழுத்து தளம்
பொலிவற்று போய் விடும் !!!

எண்ணங்களில்
இளமை
உம் தமிழ் படைப்புகளின் எழில் !!!

வாழ்க வளமுடன் !!!
*****************************************************************
==கிருபா கணேஷ் =

எழுதியவர் : கிருபா கணேஷ் (1-Sep-15, 10:46 pm)
பார்வை : 337

மேலே