பெருமை சேர்க்கும் பொறுமை

அவசரமான சுகாதாரமற்ற
சுயநல சூழலில்
பொறுமை நம்மில் பலருக்கும்
பாகற்காய் தான் ....

வரிசையில் நிற்க
பொறுமை இல்லை

உறவுகளை உன்னதமாக்க
பொறுமை இல்லை

பேருந்திற்காக காத்திருக்க
பொறுமை இல்லை

முடிவுகளுக்காக காத்திருக்க
பொறுமை இல்லை

பொறுமையாய் இருக்க
பொறுமை இல்லை

பெற்ற செல்வங்களுக்கு நேரம் செலவிட
பொறுமை இல்லை ..

அன்பு காட்ட
பொறுமை இல்லை

கணவன்மார்களிடம்
விவாதிக்க பொறுமை இல்லை

நிகழ் கால பொறுமை இன்மை
எதிர் கால இருள் ...

கடவுளிடம் வேண்டினேன்
எனக்கு பொறுமையை கொடு
ஆனால்
சீக்கிரம் கொடு என

அதற்கும் பொறுமை இல்லை

பொறுமை
கோபத்தில்
கதாநாயகன்

உறவுகளில்
பாலம் ..

பொறுமை
சுலபமற்றதால்
பொறுமையை
கடைபிடிக்க
விதி முறைகள் ....

சோதனைகளை
சாதனைகளாக்கும் கருவி
பொறுமை தான்

பொறுமை அறிவின் வெளிப்பாடு

காலமிடும் கோலங்களில்
பொறுமையால்
ஒரு அழகிய சித்திரம் தீட்டலாம்

மன அமைதிக்கு பொறுமை
தன்னம்பிக்கைக்கு பொறுமை
இன்னல்களிலிருந்து
விடுபட பொறுமை

பொறுமை கசப்பு தான்
ஆயினும்
அதன் பலன் இனிப்பு

பொறுமை எனும் ஆக்க சக்தியை
வளர்ப்போம்
சோதனைகளை
முறியடிப்போம் !!!

பொறுமையால் பெருமை சேர்ப்போம் !!!



=கிருபா கணேஷ் ==

எழுதியவர் : கிருபா கணேஷ் (2-Sep-15, 7:43 am)
பார்வை : 2462

மேலே