சத்தியமாய் சாத்தியமே

உன்னை
மனம் சாடும்,
சுற்றம் சாடும்
சமூகம் சாடும்..

புடம் போட்டு உன்னை
புதுப்பிக்கும்
மறுமலர்ச்சி இலக்காகும்
முயற்சி

வினாக்கள் விடைகள்
பிரச்சினை தீர்வுகள்
வடிகால் விசும்பல்
தலை கீழ் விகிதங்கள்

பிரச்சினைக்கு தீர்வு
பிரச்சினையில் தான்..
வேறெங்குமில்லை
விருப்பங்கள் விரிவடையில் தான்
விஸ்வரூப சங்கடங்கள்

சுருக்குங்கள்
எண்ணம் எதிர்பார்ப்பு,
..இலக்கு இலகுவாக

கனவு கைக்குள் அடங்க
காந்தல் சாந்தலாகுமே ..

விளக்கம் உன்னுள்
விபரீதமும் உன்னுள்
வினாவுக்கான
விடையும் உன்னுள்

தேடு, தடவு.
நெருடு, நெருங்கு.
இலக்குக்கு இணங்கு

அது தான் அழகு!

எழுதியவர் : செல்வமணி (2-Sep-15, 10:32 am)
பார்வை : 292

மேலே