மனக்கண்

இந்தக்கண்ணுக்கு

தெரிந்தவர்களின் கருத்து
கிட்டப்பார்வையின் பிம்பம்;
தெரியாதவர்களின் கருத்து
தூரப்பார்வையின் பிம்பம்...

கண் குருடானால் தான்
கருத்து துணையாகும்..

அந்தக்கருத்துக்கும்
உள் உணர்வே வடிகால்

கூனியின் கூற்று
கைகேயியின் மனக்கண்ணை,
சகுனியின் சதிராட்டம்
கௌரவர்களின் உள் உணர்வை

குருடாக்கியது வரலாறு.
கண்கட்டு வித்தைகளே
வாழ்வின் வீதிப்பள்ளங்கள்
விதிப்பயணங்கள்

கண்ணிருந்தும் குருடாவது
சுயநலம்.
காதிருந்தும் கேளாதிருப்பது
தீஞ்செயல்.

தன்னையே ஏமாற்றி
வாழ்வது ஒரு வழிப்பாதை பயணம்.
விபத்துகள் விபரீதங்களும் தானே தேடுவது தான்
கெட்டவனின் நோக்கும் போக்கும்.

நல்வழிப்படுத்த நால்வர் உண்டு
தீயவழி செல்ல ஒருவர் போதும்

"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்.. "

மனக்கண்ணின் உணர்வைப்பார்
எல்லாம் தெரியும்
அந்த நால்வரிடம் கேட்டுசெய்
தெளிவு பிறக்கும்.

கேட்குமுன் உன்னைக்கேள்,
பார்க்கும்போது உன்னுள் கேள்
பேசும்முன் பிறரைக்கேள்
செய்யும்முன் மற்றும் சிலரைக் கேள்..

பார், கண்ணால் அல்ல, உணர்வால்
அறி, உன்னுடன் சிலரை சேர்த்து.

அதுதான் உன்னையும்
உன்னைசுற்றியும்
நன்செய்யும்.

எழுதியவர் : செல்வமணி (2-Sep-15, 10:37 pm)
Tanglish : manakkan
பார்வை : 394

மேலே