கண்களை திறந்துகொள் கண்மணி

நிழலாய் உன்னோடு
வர விழைகிறேன்...
நீயோ
இருட்டு கோட்டையில் நுழைந்து
உன் இதயத்தை பூட்டிக்கொண்டாய்...

உன் மனக்கதவை தட்டி பார்க்க ஆசைதான்
முடியவில்லையடி!
திறக்காமல் போவாயோ என்ற
அச்சத்தால் அல்ல...
உன் அமைதி என்னால்
தொலைந்துவிடுமோ என்று !

துப்பட்டாவால் முகம் போர்த்தி
துயரத்தால் மனம் போர்த்தி
நீயும் என்னை
ஒளிந்து கடந்து போவதேனோ ?

புழுங்கி போன உன் வாழ்வில்
புன்னகை பூங்காற்று வீச
என்ன விலை வேண்டும் என்னவளே..?

என் பிரிவு தான் வேண்டும் என்று
அப்போதே சொல்லி இருந்தால்
எப்போதோ விலகி இருப்பேனே ..!

நான்.. நீ சிரிப்பதை பார்த்தே
பழக்கப்பட்டவன்!

உன் கண்களை
திறந்துகொள் என் கண்மணியே ...!
உன் கருவிழியில்
இவன் இனி விழவே மாட்டான் !

==>
இவன்,
நிலவின் நண்பன் !

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரி) (3-Sep-15, 1:02 pm)
பார்வை : 107

மேலே