நான் ஏன் நானாக இருக்க முடிவதில்லை
என்னைச்சுற்றி வியாபித்திருக்கும் சமூகத்தின்
பாவனைகளில் இருந்து என்னை நான் காத்துகொள்வது
மிகவும் முக்கியமாகிறது.
ஏனென்றால் :
உருகி உருகி கடவுளிடம் ப்ராத்திக்கும் தீவிர பக்தி கொண்ட மனிதர்களின் மனம் குறுகலாகத்தான் இருக்கிறது....சிலர் அன்பே கடவுள் என எப்போதும் உபதேசித்தபடி இருப்பார்கள்..ஆனால் மனதில் வஞ்சகம் நிறைந்திருக்கும்......சிலர் perfection பற்றியும் self discipline பற்றியும் மணிக்கணக்காய் பேசுவார்கள்..ஆனால் படித்த நியூஸ் பேப்பரைகூட மடித்து வைக்காமல் சிதறியபடி வைத்துவிட்டு போவார்கள்.....,வீட்டிற்குள் "உனக்கென்ன தெரியும்,சொல்றத செய்,மறு பேச்சு தேவையில்லை"என்று மனைவியிடம் எரிந்துவிழும் மனிதர்கள்தான் வெளியே சக அலுவலகத் தோழிகளின் புலம்பல்களுக்கு உச் கொட்டி,ஆறுதல் சொல்லி சிரிக்கவைத்து பெண்களை கொண்டாடுபவர்களைப் போல் நடந்துகொள்வார்கள்...இப்படி,இதுபோல், பாசாங்கு செய்யும் சூட்சமக்காரர்கள் ஒரு சாதரண மனிதனைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தால் கவலைப்படுவதற்கில்லை.ஆனால் மிக நெருக்கத்தில் சுற்றிலும் சூழ்ந்திருக்கும்போது அவன் தன் சுயத்தை இழக்காமல் இருக்கவே வாழ் நாள் முழுதும் போராட வேண்டியிருக்கும்...

