தலைப்பில்லா கவிதை
எந்தன் உடலை
ஆடையின்றி முதலில் பார்த்தாய்
என் நகம்
உன் உடல் கிழிக்கயில்
செல்லமாய் சினுங்கினாய்
என் மார்பும் ,உன் மார்பும்
முக்கால் வாசி இரவுகள்
இணைந்தே இருக்க வைத்தாய்
என் கண்கள்
காதலுக்கு ஏங்கிய போது
கயல்விழியோடு கனவாய் வந்தாய்
என் உடலில்
நீ முத்தமிடாத இடமொன்று
இல்லாதபடி செய்தாய்
என் உடல்
குளிரில் நடுங்கிய போது இளங்கனலோடு
உடல் சேர்ந்து உஷ்னம் சேர்த்தாய்
என்று உன்னை பார்தேனோ
அன்று தான்
அழகின் அர்த்தம் கற்பித்தாய்
என் வாழ்வில்
முதல் பிரிவின் வலியை
முதலாய் நீயே தந்தாய்
எத்துனை முறை தவரிழைதாலும்
அத்துனை முறையும்
அன்பால் கட்டி அனைத்தாய்
எங்கே நான் சென்றாலும்
எப்போதும் பின் தொடர்ந்தாய்
எத்தனை பெரிய துன்பத்தையும்
எளிதாய் தீர்க்க கற்று தந்தாய்
எவ்வளவு பெரிய தூரத்தையும்
சிறிதாய் மாற்ற பயிற்சி தந்தாய்
எதற்காக நான் சிரித்தாலும்
உனக்காக சிரிப்பதாய் நினைத்தாய்
எப்போது அழைத்தாலும்
ஏனென்று கேட்காமல் எதிரே நின்றாய்
எதனை செய்வதென
திக்காடிய போது
இதனை செய்யென தெளிவூட்டினாய்
என்னாலும் எப்போதும்
என்னோடு விளையாடி
வின்னோடு பறக்க செய்தாய்
என்னை சிலர்
எள்ளி நகையாடிய போது
எதிர்க்க கற்று தந்தாய்
என் விரல் சேர்ந்து நடக்க
விரல் தேடிய போது
விரல் தந்து வீடு வரை வந்தாய்
என் மனம்
ஆறுதல் தேடிய போது
கனிவாய் பேசி
இதயத்தை இதமாக்கி சென்றாய்
என் தூக்கமில்லா இரவுகளில்
தாலாட்டாய் பேசி தூக்கம் தந்தாய்
எப்போதும்
சின்னதாய் புன்னகை தந்து
சிரிப்பின் மகத்துவம் உரைத்தாய்
என் அன்பு தாயே
எந்தன் வாழ்வின்
பாதி நாட்கள் உந்தன் மடியினில் கழித்தேன்
மீதி நாட்கள் உன் நினைவில் கழித்தேன்