ஜாதி மத வெறி

வேறு வேறு ஜாதிகளில்
வேறுபட்ட மனித இனம்,

சதையினை அறுத்துவிட்டு
ரத்தத்தை கேட்கிறது ஓர் மரணகுளம்!.

நெஞ்சத்தில் இலட்சியத்தை
ஊற்றி வைக்க நேரமில்லை,

என்றாலும் நெஞ்சத்தில் ஜாதிவெறி
மதவெறி தூண்டுவதே அவர்வேலை!

எத்தனையோ சிறுபிஞ்சு
முளைக்கும் முன்னே காய்போல்
பழுத்ததை என்ன சொல்ல?

எல்லாம் ஜாதி,மத வெறி கொண்டு
கையில் அறுவா எடுத்ததே
மனிததை கொல்ல!!

ஜாதி அரண்மணைக்குள்
நுழைந்து விட்ட மனித இனம்

குடிசைக்குள் திரும்புவதற்குள்
கட்டையில் போகிறதே அவரவர்
பிணம்!!

விலங்குகளுக்கு இல்லாமல்
போன ஜாதி,

பறவைகளுக்கு இல்லாமல்
போன ஜாதி,

பாவப்பட்ட மனித இனத்திற்கு
கொடுக்கப்பட்டது ஏன் தெரியுமோ?

தன் இரைக்காக மட்டுமே வேறு
விலங்கினை துன்புறுத்தும் விலங்குகளுக்கு மத்தியில்

சும்மா போகும் மனிதனை ஜாதி பேர்
சொல்லி கொலை செய்யும்
மனிதர்களுக்கு கொடுத்ததே
சரி தான்!!

ஜாதி மறுக்கும் உரையாடல் கேட்ட
பின் உரையாடியவரை வெட்டி வீழ்த்தும் காலத்தில்,

பயந்தே சொல்லிவிட்டேன் .நானும்
இருப்பேனோ நாளைய உலகத்தில்!

ஆயினும் ஓன்று மறவாதீர்,

நாம் மனித வடிவில் ஓர்
ஜாதி மிருகம்!

எழுதியவர் : (6-Sep-15, 5:53 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : jathi madha veri
பார்வை : 109

மேலே