கல்வி கற்க
கல்வி கரை இல்லாதது
என்னும் உண்மை ஓரளவு கற்றுத் தேர்ந்த பின்பே
நாம் உணர முடிகிறது ஏனெனில்
நாம் கற்றுக் கொண்டது சிறு துளியே
எவ்வளவு தான் கற்றாலும் மீதி
கற்க வேண்டிய கல்வி மிஞ்சி நிற்கிறது
ஏன் அறிவு கடல் போன்றது
அறிவு வளர வளர அறியும் ஆவலும்
கூடிக் கொண்டே போகிறது
அதுவே கல்வியின் வளர்ச்சியாகும்
' கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக'
கல்வி எனும் செல்வம் நாம் அடைந்து விட்டால்
கல்விக்கு இணையான செல்வம் வேறில்லை
கல்வி கற்க கற்க இன்னும் கற்க வேண்டும் என்ற
ஆவலும் ஆசையும் கூடும் அன்றிக் குறையாது
ஆவலுடன் கற்றிட்ட அழியாத செல்வத்தை
அடுத்தவர்களுக்குப் பயனுள்ளதாக்க வேண்டும்
நாம் பெற்ற செல்வம் அனைவரும் பெற வேண்டும்
அதுவே நாம் கற்ற கல்வியின் பயனாகும்
கற்க கற்றுத் தெளிக, கற்க கற்றுத் தருக

