நீயா பேசியது

என் கனவிலும் நினைவுகளிலும்
விஷம் தடவிய உன் வார்த்தைகள்!!!
விடிய விடிய முயன்றும்
என்னால் உன்னை மறக்கமுடியவில்லை!!
*******®*******
நீ என் உயிரில் இரண்டறக் கலந்து
என் உணர்வுகளோடு நித்தமும்
உறவாடுகிறாய்!
என் சுவாசத்தோடு கலந்து
தினமும் எனை திணறவைக்கிறாய்..!!
*******®*******
என் உள்ளத்தில் நீ ஏற்படுத்தி சென்ற காயங்கள் ஒருபுறம் ரணமாய் வலிக்கின்றது!
ஆனாலும் உன்னை மறந்துவிட வேண்டும் என்பதுதான் எனக்கு அடிக்கடி மறந்து போகின்றது!!
*******®*******
இருந்தும் நான் உன்னைவிட உன் நினைவுகளையே அதிகம் விரும்புகிறேன்!
அவைகள் உன்னைப்போல் அல்ல
எப்பொழுதும் என்னுடன் இருக்கின்றன எனைவிட்டு பிரியாமல்!!
*******®*******
உன் பிரிவால் என் இதயம் வலிக்கிறது தான்!
அதிலும் உன் வார்த்தைகள்
முள்ளாய் குத்தி செல்கிறது!!
*******®*******
என் கனவுகள் எல்லாம் கலைந்து போகின்றது!
அதையும் நான் ஒத்துக்கொள்கிறேன்
உன்னை மறக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டு..!!