அலை பேசி

ஊரெல்லாம் அலை பேசி
அலையெல்லாம் ஊர்பேச்சு ,
கண்ணுக்கு தெரியாத
பேச்சினிலே நம் மூச்சு !

அத்தனையும் நம் காது
நேரடியாய் கிரகித்தால்,
கட்டாயம் கிடைச்சிருக்கும்
கிறுக்கன்னு பட்டமொன்னு !

வத்திபெட்டி நூலோடு
டெலிபோன் விளையாட்டு,
செல் போனில் விளையாட்டாய்
விரல் விட்டு போகலையே !

பேரூந்து பயணத்தில்
இயற்கையை ரசிச்ச கண்ணு,
இப்ப பக்கத்து சீட்டினிலே
பிக்பாகெட்ட பாக்கலையே!

அலை அலையாய் திரிந்திருந்த
சிட்டுக்குருவி கூட்டமெல்லாம்,
கூட்ட காலிபண்ணி
கூண்டோட போயிடுச்சே!

கண்ணுக்கு தெரியாத
கதிர்வீச்சுன்னு ஒன்னு,
தலையை சுத்தி வந்து
தப்பாட்டம் போடுறதே !

பேச கிடைச்சதுன்னு
பெருசாய் நாம் நினைச்ச,
செல் போனே சிதைச்சிடுச்சே
நம்மோட நேரத்தெல்லாம் !

வாட்சாப்பு பேசு புக்கு
வசதியாய் இருக்குமுன்னு,
வங்கிய காலிபண்ணி
வாங்கிய போன் எடுத்து,

வாகனம் ஓட்டும்போது
பேசாதேன்னு சொல்லிவச்சும்,
பேசின எத்தனையோ பேர்
பேசாம போயிட்டாங்க!

சொல்லுக்கு செல்லுன்னு
சொல்லுறத கேட்டுக்கிட்டு,
நேரத்தை சேமிச்சு
நிம்மதியாய் வாழ்ந்திடுவோம்.

எழுதியவர் : ஸ்ரீராமுலு (8-Sep-15, 9:57 am)
சேர்த்தது : மன்னார் ஸ்ரீராம்
பார்வை : 287

மேலே