வசந்தம்
இமையால் கண் மூடி நானுறங்க நினைக்கையிலே
இழந்த பருவமொன்று
இதழில் மௌன புன்னகையாய் என்
இதயம் நிறைக்கின்றதே
என்சொல்வேன்
என் பள்ளிபருவ நாட்களை...
பிறந்த ஊர் விட்டு
பிழைக்க ஊர் வந்தாலும்
பிழைல்லையே பழையன
நினைக்கையில்...
பள்ளி செல்லாத நாளில்லை
பண்ணாத சேட்டயில்லை
காலணியில்லாத கால்கள்
சுட்டதில்லை எங்கள் ஊர் சூரியன்
அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கும்
ஒரு ரூபாய் கையிலிருக்கும் தினம்
உலகின் பணக்காரன் நான்
சாயங்காலம்
வீட்டு திண்ணை
சுடுசோறு, சுடுதண்ணி
கூட்டஞ்சோறு...
பட்டை உறுகாவிற்கு
எச்சில் ஊறும்..
தெருவெல்லாம் என் பாதம்
ஊரெல்லாம் என் சத்தம்
குளக்கரை குளியல்
மாட்டுவண்டி பயணம்
வேட்டியில் திரைப்படம்
சொந்த ஊரில் தொடக்கப்பள்ளி ...
தாயின் கையால்
காலில் தைத்த முள் எடுக்க
செய்திருக்க வேண்டும் புண்ணியம்...
சோளத்தட்டை கரும்பு தின்று
வாழைப்பூ தேனுருஞ்சி
இலந்தை பழம் பொறுக்கிவந்து
இடித்துரலில் வெல்லமிட்டு
எல்லோரும் பங்கு வைத்து
தின்னசுவை என்னசொல்வேன்
தித்திக்குதே நெஞ்சில் இன்றும்...

