சுரேஷ் கிருஷ்ணா90 - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேஷ் கிருஷ்ணா90 |
இடம் | : வடக்கு பூலாங்குளம் |
பிறந்த தேதி | : 24-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 22 |
வானம் பார்த்த பூமியிலே
வந்து பொழிந்த மழையை போல்
தேடி திரிந்த காதலியே
நேரில் வந்து நீ நின்றாய்...
முகில் கண்ட மயில் போல் - மனம்
உன் முகம் காண கூத்தாடுதே...
வெயில் கண்ட பனி போல் - மனம்
உன் விரல் தீண்ட கரைந்தோடுதே...
எனை ஈர்க்கும் உன் வருகை
இயற்கையின் அதிசயம்...
எனை சாய்க்கும் உன் புன்னகை ஈடில்லா ஆயுதம்...
அடி வயிற்றில் பூ மலரும்
அதிசயத்தை நானுணர்ந்தேன்
அடி பெண்ணே உனை காண
தினந்தோறும் தவமிருந்தேன்...
மழை தாங்கும் நிலம் போல
மார்போடு எனை ஏற்பாய்...
மரம் தரும் நிழல் போல
மரணம் வரை உடனிருப்பேன்...
வானம் பார்த்த பூமியிலே
வந்து பொழிந்த மழையை போல்
தேடி திரிந்த காதலியே
நேரில் வந்து நீ நின்றாய்...
முகில் கண்ட மயில் போல் - மனம்
உன் முகம் காண கூத்தாடுதே...
வெயில் கண்ட பனி போல் - மனம்
உன் விரல் தீண்ட கரைந்தோடுதே...
எனை ஈர்க்கும் உன் வருகை
இயற்கையின் அதிசயம்...
எனை சாய்க்கும் உன் புன்னகை ஈடில்லா ஆயுதம்...
அடி வயிற்றில் பூ மலரும்
அதிசயத்தை நானுணர்ந்தேன்
அடி பெண்ணே உனை காண
தினந்தோறும் தவமிருந்தேன்...
மழை தாங்கும் நிலம் போல
மார்போடு எனை ஏற்பாய்...
மரம் தரும் நிழல் போல
மரணம் வரை உடனிருப்பேன்...
வெந்நீரில் மீன் போல
என் நெஞ்சம் துடிக்குதடி...
மழை நீரில்
மணல் வீடாய்
என் நெஞ்சம் கரையுதடி...
பிரிவும், இழப்பும் புதிதல்ல எனக்கு
இருந்தும் ஏனோ
மனம் ஏங்குது உனக்கு...
அன்புள்ள என்னவளே
எனை மறந்த எனதுயிரே
இறுதியாய் ஓர் கடிதம்
உதிரத்தால் எழுதுகிறேன்
நலமா..?
நானாகத்தானே நானிருந்தேன்
நீதானே எனை ஈர்த்தாய்
நம் விழி மோதிய முதல் போரில் ஒரேஒருமுறை கடைசியாய்
உனை வென்றேன்..
மறுமுறை எல்லாம் நீயே...
உன் வேல்விழி தாக்க
சரணடைந்தேன்...
அன்றே அழிந்தேன்...
உன் பார்வையில் குறுஞ்செய்தியாய்
தொடங்கிய நம் நாட்கள் - பின்
உன் குரலினில் சில மணிநேரங்களாய்
வளர்ந்து கரைந்தன விடியலை தேடி
ஏங்கும் நம் இரவுகளின் மடியில்...
முடிவுரையிலேயே மீண்டும் தொடங்கி
தொடர்ந்து தொடரும் நம் பேச்சுக்கள்
எனை சீண்டி பார்க்கும்
சிறு சிறு குறும்புகள்
தூங்க
அன்புள்ள என்னவளே
எனை மறந்த எனதுயிரே
இறுதியாய் ஓர் கடிதம்
உதிரத்தால் எழுதுகிறேன்
நலமா..?
நானாகத்தானே நானிருந்தேன்
நீதானே எனை ஈர்த்தாய்
நம் விழி மோதிய முதல் போரில் ஒரேஒருமுறை கடைசியாய்
உனை வென்றேன்..
மறுமுறை எல்லாம் நீயே...
உன் வேல்விழி தாக்க
சரணடைந்தேன்...
அன்றே அழிந்தேன்...
உன் பார்வையில் குறுஞ்செய்தியாய்
தொடங்கிய நம் நாட்கள் - பின்
உன் குரலினில் சில மணிநேரங்களாய்
வளர்ந்து கரைந்தன விடியலை தேடி
ஏங்கும் நம் இரவுகளின் மடியில்...
முடிவுரையிலேயே மீண்டும் தொடங்கி
தொடர்ந்து தொடரும் நம் பேச்சுக்கள்
எனை சீண்டி பார்க்கும்
சிறு சிறு குறும்புகள்
தூங்க
மீன்கள் வீசும்
தூண்டில் முள்தான்
பெண்களின் பார்வை...
முள்ளில் மாட்ட
காத்து கிடப்பது
ஆண்களின் இதயம்...
உன்னை தீண்டவே - மழை
மண்ணில் குதிக்குதோ...
உன்னால் ஏங்கி ஏங்கியே - நிலா
தேய்ந்து மறையுதோ...
உன்னை பார்த்ததும் - நெஞ்சில்
மின்னல் பூக்குதே
நீ கடந்து சென்றதும் - கால்கள்
காற்றில் பறக்குதே...
உன்னை சேர்வதே - என்
வாழ்வின் லட்சியம்
நீ என்னை சேர்ந்ததும்
உலகை வெல்வேன் நிச்சயம்...
உன்னை தீண்டவே - மழை
மண்ணில் குதிக்குதோ...
உன்னால் ஏங்கி ஏங்கியே - நிலா
தேய்ந்து மறையுதோ...
உன்னை பார்த்ததும் - நெஞ்சில்
மின்னல் பூக்குதே
நீ கடந்து சென்றதும் - கால்கள்
காற்றில் பறக்குதே...
உன்னை சேர்வதே - என்
வாழ்வின் லட்சியம்
நீ என்னை சேர்ந்ததும்
உலகை வெல்வேன் நிச்சயம்...
வெயிலால் தார் உருகும்
தேசிய நெடுஞ்சாலையில்
நிழல் தேடும் ஒற்றை மரம் போல்
உன் துணை தேடும் என் மனம்...