கடிதம்
அன்புள்ள என்னவளே
எனை மறந்த எனதுயிரே
இறுதியாய் ஓர் கடிதம்
உதிரத்தால் எழுதுகிறேன்
நலமா..?
நானாகத்தானே நானிருந்தேன்
நீதானே எனை ஈர்த்தாய்
நம் விழி மோதிய முதல் போரில் ஒரேஒருமுறை கடைசியாய்
உனை வென்றேன்..
மறுமுறை எல்லாம் நீயே...
உன் வேல்விழி தாக்க
சரணடைந்தேன்...
அன்றே அழிந்தேன்...
உன் பார்வையில் குறுஞ்செய்தியாய்
தொடங்கிய நம் நாட்கள் - பின்
உன் குரலினில் சில மணிநேரங்களாய்
வளர்ந்து கரைந்தன விடியலை தேடி
ஏங்கும் நம் இரவுகளின் மடியில்...
முடிவுரையிலேயே மீண்டும் தொடங்கி
தொடர்ந்து தொடரும் நம் பேச்சுக்கள்
எனை சீண்டி பார்க்கும்
சிறு சிறு குறும்புகள்
தூங்கவிடா மெல்லிசையாய்
உன் சிணுங்கல்கள்
எல்லாம் மறந்தாயா...?
தோள் சாய்ந்த மாலைநேரம்
விழிகள் பேசிய மௌன பொழுதுகள்
எல்லாம் மறந்தாயா...?
பிரிந்து சென்றாலும் வாழ்வேன்
தெரிந்து கொன்றாலும் சாவேன்
மறந்து சென்றாயடி
மனது தாங்கவில்லை
மரணம்தான் இனி எல்லை
கொஞ்சி பேசியதெல்லாம் பொய்யோ
என் நெஞ்சில் வளர்ந்த காதல் பிழையோ
பிரிவும், இழப்பும் புதிதல்ல எனக்கு
இருந்தும் ஏனோ மனம் ஏங்குது உனக்கு...