எனதன்பன் பாரதிக்கு, நினைவஞ்சலி

பாப்பாப் பாவென வளிநுகர்ப் பாவலன்
பாப்பாப் பாவினைப் பாடினன் மகிழ்வுடன்
தோப்பைத் தேடிய லைந்திடுங் காலதன்
போக்குக் கேவிடு வான்கவி பெறவே.

[ கலி விருத்தம் ]

+++++++++++++++++++++++++++++

பாமர மக்களைப் போலல்லாமல், என் பாரதியெனும் பாவலன்,
பா- பா-பா- என்றே மூச்சுக்காற்றைச் சுவாசித்தனன்.
அவன், எமது பிள்ளைகள் பாடி ஆடி மகிழ,
பாப்பாப்பாட்டினைப் பாடி மகிழ்ந்தவன்.

தேடல், உயர்வான கவிதையை அவன் எழுதுகோலுக்குத்
தேடித் தருவனவாகையால், தோப்பைத் தேடி அலைகின்ற
அவனது கால்களை, அவற்றின் போக்குக்கே போகுமாறு
அவன் விட்டுவிடுபவன்.

+++++++++++++++++++++++++++++
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (11-Sep-15, 2:43 pm)
பார்வை : 663

மேலே