எட்டய புரத்து ஏறு

எட்டய புரத்து ஏறு
கொட்டு முரசே கொட்டு என்று
கட்டிய கவிதைகள் நூறு
கொத்தடிமைகளை அவன் உசுப்பி விட்டது
வீர தேசிய வரலாறு !

பா என்றால் பாரதியடா
அவன் பார்வையில் ஆயிரம்
எரிமலைகள் வெடிக்குமடா !

அக்கினியை குஞ்சு என்பான்
குஞ்சினை காட்டு பொந்திடை வைத்து
ஆனந்த தாண்டவம் ஆடுது என்பான்
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ என்று எக்காளமாய் கேட்பான் !

புதுமை பெண்ணுக்கு என்று வாதிடுவான்
பெண்ணடிமை என்றால் சிங்கமென சீறிடுவான்
நேர்கொண்ட பார்வையடி உனக்கு
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி கள டி உனக்கு
நிமிர்ந்து நடந்திடடி என்று ஆணையிடுவான் !

பா என்றால் பாரதியடி
பாவையருக்கு அவன் சொன்னது ஐந்தாம் வேதமடி !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-15, 7:01 pm)
பார்வை : 86

மேலே