ஏன் மறந்தாய் மனிதா

ஏன் மறந்தாய் மனிதா?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கனந்தாய்
சினந்தாய்
உன்னிலை மறந்தாய்
உன்னுடல் உயிர் பிரிந்தால்
பினம் என்பார்
பூத உடலென்பார்
உனைப் புதைக்க
உடன் அழைப்பார்
உற்றார் உறவினர் பலரை!!
தலை நிமிர்ந்தே
உன்னிலை மறந்தே
ஜடப்பொருள் உனை உயர்த்த
அதிகாரம்
ஆணவம்
போலியாய் புரிந்தாய்
உனைப் புதைப்பார் என
மறந்தே
புரியாமலே!!
அயல் மறந்தாய்
உறவுகள் துறந்தாய்
நற்குணம் மறந்தாய்
நாய்க்குணம் ஏற்றாய்
மனிதம் மறந்து
மாமனிதர் என உனை
நீயே நினைத்து
பெருமை கொண்டாய்
பாவம் உன் உயிர்
பிரியும் நிலை மறந்து!!
ஜவ்ஹர்