அத்தை மகளுக்கு சடங்கு
இவள் பால் மணம் பொங்கும் நிலா
மேல் இதழ் வரி தேர் வரும் உலா
ஊரெங்கும் சீருடன் வானவர் வளம் வரும் விழா
நீ என் தமிழ் மொழியா....
மண் வாசணை தோர்த்திடும் மணம்
அந்த மாவிலை தோரண முகம்
மட மாந்தர்கள் மனங்களில் ரணம்
இந்த பூ பூப்பெய்த தருணம்...
தாழம் பூவை தாங்கும் தருணம்
ஆளங்காட்டில் தெய்வகுணம்
சோளக்கூழில் ஈன்ற பவளம்
சொக்கவைக்கும் ரத்த இதழும்...
பூமாலை சூட வைத்து
பூவை சாய்த்து ஓரம் சேர்த்து
காயம் செய்யும் உறவு....
தேனை தங்க கூட்டில் சேர்த்து
பிற கை படாமல் பாதுகாத்து
கையில் சேர்க்கும் உறவு...
நீ உண்மையான நிலவு!