காத்திருத்தல்
நான் காத்திருந்தேன்
உன் இதழ் சிந்தும் பதில்
தேன் தருமென
நீயறிவாய்
என் காதல்
உனக்காக உயிர் விடுமென
என்னை
காக்க வைக்கிறாய் பெண்ணே
காத்திருப்பது சுகமென
ஒருநாள்
என் உயிரையே விட்டிருப்பேன்
நீ காதலிக்க மாட்டாயென
அப்போது
நீதான் வருத்தப்படுவாய்
உன்னை காதலிக்க நானில்லையென