பக்தியின் வகைகள்

பல்வகையான பக்தியின் மூலம் முக்தியடைந்த அடியார்களின் வரலாற்றிலிருந்து நாம் பக்தியின் மார்க்கங்களை அறியலாம். சாஸ்திரங்களும் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.

ச்ரவணம்:

கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவனிடம் பக்தி கொண்டொழுகுவது சரவணம் ஆகும்.

கீர்த்தனம்:

இறைவனின் புகழ்பாடும் பொருட்டு கீர்த்தனங்களை உருவாக்கி அதன் மூலம் இறைபுகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.

ஸ்மரணம்:

இறைவன் நம் மனதை படைத்த பயன் நிறைவேறும் வகையில் எப் போதும் அவனைப்பற்றி நினைத்துருகுவது ஸ்மரணம்

பாதஸேவனம்:

இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸேவனமாகும்.

வந்தனம்:

இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எனவே உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதல்.

தஸ்யம்:

எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.

ஸக்யம்:

அடியவன் இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.

ஆத்ம நிவேதனம்:

இந்த ஆத்மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்னமாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (15-Sep-15, 7:21 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : bakthiyin vakaikal
பார்வை : 99

மேலே