நாங்களில்லை
அவள் இல்லாமல்
நானில்லை ...
நான் இல்லாமல்
அவளில்லை...
என்றதெல்லாம் - அன்று!
என் வாழ்க்கையில்
அவளில்லை ...
அவள் வாழ்க்கையில்
நானில்லை
என்றதெல்லாம் - இன்று !!
நானே அவள்
வாழ்க்கையுமில்லை
அவளே என்
வாழ்க்கையுமில்லை ..
என்போமா -நாளை ?