உன் பதிவுகள் என் அதிர்வுகள்

மீள முடியாத துன்பம் என்று
இவ்வுலகினில் ஏதுமில்லை!
ஆனால்..
இன்றுதான்!
மீள முடிய இன்பம் எதுவே அறிந்துகொண்டேன் - உன் அணைப்பினில்...

நீரினில் பொருள் எடை இழக்கும் - இது நியதி!
ஆனால்...
உன் இருவிரல் என் இடை தொடும் பொழுதெல்லாம் என் உடல் எடை இழப்பது ஏனோ???

இரவினில் உன் இறுக்கத்திலும்..
பகலிலே உன் பார்வையிலும்..
என்னை வன்முறை செய்கிறாய் நீ!!
மறுக்க முடியவில்லை..
மாறாக!!!
மயக்கத்தில் மறு முறை வேண்டும் என மையல் கொள்கிறது மனது
இது ஏனோ???

கதிரவன் கணை பட்டதும் வெட்கத்தில் பனி உருகும்!
அதுபோல்..
உன் காதல் கணை பட்டதும்
என் இளமை முழுதும் ஒன்று திரண்டு...
என் இதழ் ஓரத்தில் பாதியும்..
என் இமை ஓரத்தில் மீதியுமாய்..
உருகி நிற்பதுவும் ஏனோ!!!

நீ என்னுடன் இல்லாத நேரத்தில்..
நிமிடங்களுக்கு கூட மீசை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறேன்
உன் நினைவாக...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (16-Sep-15, 6:07 am)
பார்வை : 97

மேலே