உண்மை
நிலவிற்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் அழகு என்பதால்...
மலருக்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் மென்மை என்பதால்...
தென்றலுக்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் சுவாசிப்பதால்...
உறவுகளுக்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் நேசிப்பதால்....
உலகிற்கே என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் என் உலகமாக்கி கொண்டதால்...

