அன்பை மட்டும் அறுக்கின்றோம்

கிழக்கும் மேற்கும்
தலையைத் திருப்பும்
சூரிய காந்திப் பூவாய் - உன்

சிந்தையைக் குடைந்து
அகமதை உணர்ந்து
என்னிலுன்னைக் கொணர்கின்றேன் - நீ

அழுதால் அழவுமே
சிரித்தால் சிரிக்கவும்
கண் ணாடியில் உன்னையே காண்கின்றேன் - நான்

பச்சோந்தியானேன் - நீ
பசுமரமானால் பசுமை காட்டவும்,
பட்டுப் போனால் மாற்றிக் காட்டவும்
சடுதியிலே கற்றேன் - நாம்

கூடு விட்டுக் கூடு பாய்ந்து
இருவர் ஒருவராய்த்
தெரிவதில் தானோ
அன்பை மட்டும றுக்கின்றோம்?

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (17-Sep-15, 8:22 am)
பார்வை : 79

மேலே