Patrick Koilraj - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Patrick Koilraj |
இடம் | : Singapore |
பிறந்த தேதி | : 02-Dec-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 514 |
புள்ளி | : 67 |
அன்பை விதைத்த உனக்கு
ஆத்திரப்படத் தெரியவில்லை...
கேள்விபல கேட்ட உனக்கு
பதில்கள் ஏனோ அறியவில்லை...
வணிகம் படித்த உனக்கு
வாழ்க்கைப்பாடம் புரியவில்லை...
உள்ளத்தில் வாழும் உனக்கு
உலகத்தில் வாழத் தெரியவில்லை...
மனதைப் பிசையும் அன்பே உனக்கு
மரணம் ஏனோ விளங்கவில்லை...
பொய்யுரையா நீ, இறுதியில் மட்டும்
பொய்யுரைத்துச் சென்றது ஏன்?
“Anna, I miss you” என்றது பொய்தானே?
“Anna, you will miss me” என்பதே மெய்யாயிற்றே...
மண்ணுலகில் நீ உதித்து 31 ஆண்டுகளாம் இன்று!
அன்பை விதைத்த உனக்கு
ஆத்திரப்படத் தெரியவில்லை...
கேள்விபல கேட்ட உனக்கு
பதில்கள் ஏனோ அறியவில்லை...
வணிகம் படித்த உனக்கு
வாழ்க்கைப்பாடம் புரியவில்லை...
உள்ளத்தில் வாழும் உனக்கு
உலகத்தில் வாழத் தெரியவில்லை...
மனதைப் பிசையும் அன்பே உனக்கு
மரணம் ஏனோ விளங்கவில்லை...
பொய்யுரையா நீ, இறுதியில் மட்டும்
பொய்யுரைத்துச் சென்றது ஏன்?
“Anna, I miss you” என்றது பொய்தானே?
“Anna, you will miss me” என்பதே மெய்யாயிற்றே...
மண்ணுலகில் நீ உதித்து 31 ஆண்டுகளாம் இன்று!
அதிரடியாய் வந்து மறையும் மின்னலாய்
ஆண்டொன்று சட்டென்று உருண்டதுவே
மண் முட்டி முகம்காட்டும் தளிராய்
மாயப் புத்தாண்டொன்று சுகமாய் பிறந்ததுவே
இன்பமும், துன்பமும் சரியாய்க் கொடுத்த
ஈராறு மாதமும் முடிந்ததுவே
உடலில் கொஞ்சம், மனதில் மிச்சம்
ஊனம் கொடுத்தது கடந்தாண்டு
உறவில் பிரிவும், உயிரில் வலியும்
ஊட்டிக் கொடுத்தநீ அப்படியே
புத்தம் புதிதாய் மொட்டு விரித்த நலப்
பூவும் எனக்குக் கொடுத்திட்டாய்
புதிதாய்ப் பிறந்த ஆண்டே உன்னை
பூரிப்புடனே அள்ளியணைத்து - எதிர்பார்க்கின்றேன்;
நீ நல்கவிருக்கும்
நலன்களையும், சுமைகளையும்
புன்னகையோடே!!!
- பேட்ரிக் குடும்பத்தார்
அதிரடியாய் வந்து மறையும் மின்னலாய்
ஆண்டொன்று சட்டென்று உருண்டதுவே
மண் முட்டி முகம்காட்டும் தளிராய்
மாயப் புத்தாண்டொன்று சுகமாய் பிறந்ததுவே
இன்பமும், துன்பமும் சரியாய்க் கொடுத்த
ஈராறு மாதமும் முடிந்ததுவே
உடலில் கொஞ்சம், மனதில் மிச்சம்
ஊனம் கொடுத்தது கடந்தாண்டு
உறவில் பிரிவும், உயிரில் வலியும்
ஊட்டிக் கொடுத்தநீ அப்படியே
புத்தம் புதிதாய் மொட்டு விரித்த நலப்
பூவும் எனக்குக் கொடுத்திட்டாய்
புதிதாய்ப் பிறந்த ஆண்டே உன்னை
பூரிப்புடனே அள்ளியணைத்து - எதிர்பார்க்கின்றேன்;
நீ நல்கவிருக்கும்
நலன்களையும், சுமைகளையும்
புன்னகையோடே!!!
- பேட்ரிக் குடும்பத்தார்
கருவறை சுமந்தாய் - இனி
கல்லறை வரையுனைச்
சுமக்கும் வரம்தா
ஈரைந்து திங்கள் உன்னுள் வாசம் - இனி
இருக்கும் வரையிலென் மனை
தங்க வரம்தா
பிள்ளைகள் உடல் நலம்
பேணிக் காக்க நீ
நித்தம் ஊட்டிய அழகே தனி தான்
வாரம் தோறும் தவறிவிடாத உன்
எண்ணைக் தேய்ப்பும்
அன்பின் சான்றே
ஒருபடி நீயும் உன்னைத் தாழ்த்தி
கடைதனில் வியாபாரம்
பார்த்ததும் எனக்கே
அளவிலாது நான் தவறுகள் செயினும்
அன்பின் மிகையால்
மன்னித்து மறந்தாய்
உன்னுழைப்பை யெலாம் சூறையாடினும்
அமுத சுரபியாய்
அள்ளிக் கொடுத்தாய்
வலிப்பு நோயின் வாயினுள் நின்றே
பிரியாணி சமைத்து
எனக்குக் கொடுப்பாய்
உனக்காய் சேர்த்த சொத்துக்களனைத்து
இருந்தும் இல்லாதிருப்பவர் பலரே
இவ்வையகம் தனிலே உறவாய்...
இப்புவி விட்டகன்றும் நீயோ - பலர்
இதயத்துள்ளே என்றும் நிலையாய்
மண்ணகப் பயணம் போதுனென்றோ - நீ
விண்ணகப் பயணம் போய்விட்டாய்
நினைவில் விட்டுச் சென்றதெல்லாம்
நிலையாய் இருக்கு நெஞ்சினிலே
எண்ணிலடங்காக் கேள்வி யெல்லாம்
எங்களிடத்து மட்டும் தானோ?
இறைவன் அழைத்த தருணத்தில்
இடையில் வினவத் தோணலையோ?
ஆறு வருடம் ஓடிவிட
ஆறா வடுவாய் இருக்கின்றாய் - என்
ஆற்றல் மொத்தம் கொடுக்கின்றேன் - உன்
ஆவி திரும்ப வந்திடுமோ?
தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு
தனயனைத் தவிக்க விடுவதுமேன்? - உறவில்
இனிஓர் இழப்பை யான் காணாதிருக்க
இறையை வேண்டுவாய் என்மக
கருவறை சுமந்தாய் - இனி
கல்லறை வரையுனைச்
சுமக்கும் வரம்தா
ஈரைந்து திங்கள் உன்னுள் வாசம் - இனி
இருக்கும் வரையிலென் மனை
தங்க வரம்தா
பிள்ளைகள் உடல் நலம்
பேணிக் காக்க நீ
நித்தம் ஊட்டிய அழகே தனி தான்
வாரம் தோறும் தவறிவிடாத உன்
எண்ணைக் தேய்ப்பும்
அன்பின் சான்றே
ஒருபடி நீயும் உன்னைத் தாழ்த்தி
கடைதனில் வியாபாரம்
பார்த்ததும் எனக்கே
அளவிலாது நான் தவறுகள் செயினும்
அன்பின் மிகையால்
மன்னித்து மறந்தாய்
உன்னுழைப்பை யெலாம் சூறையாடினும்
அமுத சுரபியாய்
அள்ளிக் கொடுத்தாய்
வலிப்பு நோயின் வாயினுள் நின்றே
பிரியாணி சமைத்து
எனக்குக் கொடுப்பாய்
உனக்காய் சேர்த்த சொத்துக்களனைத்து
இருந்தும் இல்லாதிருப்பவர் பலரே
இவ்வையகம் தனிலே உறவாய்...
இப்புவி விட்டகன்றும் நீயோ - பலர்
இதயத்துள்ளே என்றும் நிலையாய்
மண்ணகப் பயணம் போதுனென்றோ - நீ
விண்ணகப் பயணம் போய்விட்டாய்
நினைவில் விட்டுச் சென்றதெல்லாம்
நிலையாய் இருக்கு நெஞ்சினிலே
எண்ணிலடங்காக் கேள்வி யெல்லாம்
எங்களிடத்து மட்டும் தானோ?
இறைவன் அழைத்த தருணத்தில்
இடையில் வினவத் தோணலையோ?
ஆறு வருடம் ஓடிவிட
ஆறா வடுவாய் இருக்கின்றாய் - என்
ஆற்றல் மொத்தம் கொடுக்கின்றேன் - உன்
ஆவி திரும்ப வந்திடுமோ?
தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு
தனயனைத் தவிக்க விடுவதுமேன்? - உறவில்
இனிஓர் இழப்பை யான் காணாதிருக்க
இறையை வேண்டுவாய் என்மக
தலைமுடி கோதி
தோள்கள் தொட்டு
முதுகும் தட்டி
கறைபடா தணைத்த
முன்நெற்றி முத்தம்
தாயாய்க் கொஞ்சம்
சேயாய் மீதம்
மொத்த உறவாய் நீ
உனைப் பத்து மாதம்
மட்டும் சுமக்க
சுயநலம் மறுக்க - தோளில்
சுமக்கச் சித்தம் கொண்டேன்
வாழ்நாளெல்லாம்
நீ பேசும் மழலையில்
பித்தம் கொண்டேன்
உன் அபிநய மனைத்திலும்
களிநடனம் கண்டேன்
சின்னப் பாதம் பதித்து நடக்க
கையைக் காலணியாய்த் தந்தேன்
பருவம் எய்திய பின்னும் உன்னை
கைக்குள் பொதிந்தே வைத்திடுவேன்
கனவில் அடிக்கடி
வந்தும் போகும்
வானத்து தேவதையே!
நிஜத்தில் வந்தெனைத்
தூங்க விடாது - கனவை
நிஜமாய் செய்வாயோ?
பெண்ணைப் பெற்றவனுக்கு மட்டுமல்ல
பெண் சிசு
நண்பர்கள் (10)

ர கீர்த்தனா
சென்னை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

நா கூர் கவி
தமிழ் நாடு
