புத்தாண்டு 2015

அதிரடியாய் வந்து மறையும் மின்னலாய்
ஆண்டொன்று சட்டென்று உருண்டதுவே

மண் முட்டி முகம்காட்டும் தளிராய்
மாயப் புத்தாண்டொன்று சுகமாய் பிறந்ததுவே

இன்பமும், துன்பமும் சரியாய்க் கொடுத்த
ஈராறு மாதமும் முடிந்ததுவே

உடலில் கொஞ்சம், மனதில் மிச்சம்
ஊனம் கொடுத்தது கடந்தாண்டு

உறவில் பிரிவும், உயிரில் வலியும்
ஊட்டிக் கொடுத்தநீ அப்படியே

புத்தம் புதிதாய் மொட்டு விரித்த நலப்
பூவும் எனக்குக் கொடுத்திட்டாய்

புதிதாய்ப் பிறந்த ஆண்டே உன்னை
பூரிப்புடனே அள்ளியணைத்து - எதிர்பார்க்கின்றேன்;

நீ நல்கவிருக்கும்
நலன்களையும், சுமைகளையும்
புன்னகையோடே!!!

- பேட்ரிக் குடும்பத்தார்

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (27-Apr-16, 12:53 pm)
பார்வை : 1748

மேலே