ஒத்தயில நிக்கிறியே
ஒத்தயில நிக்கிறியே !
நள்ளிரவு வேளையிலே
மதுர மல்லி சூடி
ஒத்தயில நிக்கிறியே ?
உன் கையில்
சுழலும் முந்தானை சேலை
கண்டும், காணாமல்
கடக்கின்றனர் பலர்.
பௌர்ணமி நிலவொளி
பட்டுத் தெறிக்கும்
பளிங்கு முகத்தில்
திருஷ்டியாய் ஒரு கீறல்!
முதல் முறை
இணங்க மறுத்ததின் பரிசோ ?
விரும்பித்தான் செய்யலை நீயும்,
இருந்தும் வேறு என்ன தொழில் தெரியும்?
வேசிகள் கூடாரத்திற்குள்
வேலியிடப்பட்டவளுக்கு.