விஜயகுமார் ராஜாமணி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : விஜயகுமார் ராஜாமணி |
இடம் | : தாராபுரம், திருப்பூர் மாவ |
பிறந்த தேதி | : 27-Dec-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 3 |
ஒத்தயில நிக்கிறியே !
நள்ளிரவு வேளையிலே
மதுர மல்லி சூடி
ஒத்தயில நிக்கிறியே ?
உன் கையில்
சுழலும் முந்தானை சேலை
கண்டும், காணாமல்
கடக்கின்றனர் பலர்.
பௌர்ணமி நிலவொளி
பட்டுத் தெறிக்கும்
பளிங்கு முகத்தில்
திருஷ்டியாய் ஒரு கீறல்!
முதல் முறை
இணங்க மறுத்ததின் பரிசோ ?
விரும்பித்தான் செய்யலை நீயும்,
இருந்தும் வேறு என்ன தொழில் தெரியும்?
வேசிகள் கூடாரத்திற்குள்
வேலியிடப்பட்டவளுக்கு.
விடுதலை
சென்னை வெய்யிலின் தாக்கம் குறையத் தொடங்கிய மாலை நேரம் அது. கையில் புகையும் சிகரெட் மகேஷ்க்கு இருமலை வரவைத்து தன்னை எச்சரிக்கை செய்வதை சிறிதும் பொருட்படுத்தாமல், காற்றில் தனது எதிர்காலத்தை தேடிக்கொண்டிருந்தான்.
இந்த சிகரெட் பழக்கம் , தான் வேலை செய்யும் எம்.என்.சி-யின் முதல் வாரத்தில் மகேஷ்க்கு கட்டடயமாகப் பட்டது. பின்பு ஐ.டி வேலைகளின் இலவச இணைப்பான மன அழுத்தம் அவனை சிகரெட்டோடு நெருங்கி உறவாட வைத்தது.
அப்போது தேவை எதுவும் இல்லாமல் இருப்பினும் ஸ்மார்ட்போனின் லாக்-ஐ ரிலீஸ் செய்தான். அந்த வினாடியில், 'காதல் கனவே' ரிங்டோனோடு நந்தினியிடமிருந்து அழைப்பு வரவே, ஏதோ அவளே நேரில் வந்தத
1.வாழ்வியல்
நகரத்திற்கு ஐ.டி வேலைக்கு சென்று நொந்து வந்தவனை ஏளனமாய் பார்த்தது ஊர்க்குளத்தில் மீன் கிட்டிய கொக்கு.
2.இணையப்புலவனின் வறுமை
சங்கப் புலவனின் வறுமையை காவியமாக வடித்து பதிவேற்றம் செய்துவிட்டு தனது வாசகர்களின் எண்ணிக்கையை ஒரு முறை யோசித்து அதிகம் நொந்தான்.
3. விளம்பர அரசியல்
'அர்மானி' கைச்சட்டையும் , 'டாம்மி ஹில்பிகர்' கால்சட்டையும் அணிந்து வந்த பிரபல நடிகர் 'மேக் இன் இந்தியா' விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.