விடுதலை

விடுதலை


சென்னை வெய்யிலின் தாக்கம் குறையத் தொடங்கிய மாலை நேரம் அது. கையில் புகையும் சிகரெட் மகேஷ்க்கு இருமலை வரவைத்து தன்னை எச்சரிக்கை செய்வதை சிறிதும் பொருட்படுத்தாமல், காற்றில் தனது எதிர்காலத்தை தேடிக்கொண்டிருந்தான்.


இந்த சிகரெட் பழக்கம் , தான் வேலை செய்யும் எம்.என்.சி-யின் முதல் வாரத்தில் மகேஷ்க்கு கட்டடயமாகப் பட்டது. பின்பு ஐ.டி வேலைகளின் இலவச இணைப்பான மன அழுத்தம் அவனை சிகரெட்டோடு நெருங்கி உறவாட வைத்தது.

அப்போது தேவை எதுவும் இல்லாமல் இருப்பினும் ஸ்மார்ட்போனின் லாக்-ஐ ரிலீஸ் செய்தான். அந்த வினாடியில், 'காதல் கனவே' ரிங்டோனோடு நந்தினியிடமிருந்து அழைப்பு வரவே, ஏதோ அவளே நேரில் வந்ததுவிட்டது போல பதறி சிகரெட்டை காலின் கீழிட்டு மிதித்தான்.மகேஷ்க்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் அவள்.
ஆம், நாளை அவள் வரவோடு சிகரெட்டிலிருந்து விடுதலையும் வரலாம்.

எழுதியவர் : விஜயகுமார் ராஜாமணி (27-Apr-16, 12:10 pm)
Tanglish : viduthalai
பார்வை : 294

மேலே