மண்ணுலகில் நீ உதித்து 31 ஆண்டுகளாம் இன்று

அன்பை விதைத்த உனக்கு
ஆத்திரப்படத் தெரியவில்லை...

கேள்விபல கேட்ட உனக்கு
பதில்கள் ஏனோ அறியவில்லை...

வணிகம் படித்த உனக்கு
வாழ்க்கைப்பாடம் புரியவில்லை...

உள்ளத்தில் வாழும் உனக்கு
உலகத்தில் வாழத் தெரியவில்லை...

மனதைப் பிசையும் அன்பே உனக்கு
மரணம் ஏனோ விளங்கவில்லை...

பொய்யுரையா நீ, இறுதியில் மட்டும்
பொய்யுரைத்துச் சென்றது ஏன்?

“Anna, I miss you” என்றது பொய்தானே?
“Anna, you will miss me” என்பதே மெய்யாயிற்றே...

மண்ணுலகில் நீ உதித்து 31 ஆண்டுகளாம் இன்று!

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (28-Apr-16, 7:49 am)
பார்வை : 74

மேலே