உச்சம்
*
வெளிவராத ரகசியம்
வெளியில் வந்து சந்தி சிரித்தது.
*
மாப்பிள்ளையின் மீதே வைத்தாள் கண்
கல்யாணத்திற்கு வந்த மணமாகாதப் பெண்
*
தேடி வந்து சேர்கின்றது
வாக்காளர்களின் கைகளில் பணம்
*
இலவசமாகவே கொடுத்தார்கள்
தேர்தல் அறிக்கை.
*
தங்கம் விலை உச்சம்
வாங்குவோர்க்கு அச்சம்.
*
படிப் படியாகக் குடிப்பழகு
படிப் படியாக மதுவிலக்கு.
ந.க.துறைவன்.
*