உன் ஆவி திரும்ப வந்திடுமோ

இருந்தும் இல்லாதிருப்பவர் பலரே
இவ்வையகம் தனிலே உறவாய்...
இப்புவி விட்டகன்றும் நீயோ - பலர்
இதயத்துள்ளே என்றும் நிலையாய்

மண்ணகப் பயணம் போதுனென்றோ - நீ
விண்ணகப் பயணம் போய்விட்டாய்
நினைவில் விட்டுச் சென்றதெல்லாம்
நிலையாய் இருக்கு நெஞ்சினிலே

எண்ணிலடங்காக் கேள்வி யெல்லாம்
எங்களிடத்து மட்டும் தானோ?
இறைவன் அழைத்த தருணத்தில்
இடையில் வினவத் தோணலையோ?

ஆறு வருடம் ஓடிவிட
ஆறா வடுவாய் இருக்கின்றாய் - என்
ஆற்றல் மொத்தம் கொடுக்கின்றேன் - உன்
ஆவி திரும்ப வந்திடுமோ?

தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு
தனயனைத் தவிக்க விடுவதுமேன்? - உறவில்
இனிஓர் இழப்பை யான் காணாதிருக்க
இறையை வேண்டுவாய் என்மகனே.

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (18-Apr-16, 2:16 pm)
பார்வை : 55

மேலே