காலமெல்லாம் காப்பவன்
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...!
பரமன் மகனாம் பெரியவனை
பானை வயிற்றுக் கரிமுகனை,
உருவில் பெரிய கணபதியை
ஊரெலாம் காக்கும் குணநிதியை,
வரும்பகை யழிக்கும் வல்லவனை
வானவர்க் கெல்லாம் மேலவனை,
கரமது கூப்பி வணங்கிடுவாய்
காலமும் காப்பான் ஐங்கரனே...!