லட்சணங்கள்

அரசியலில் பொதுநலம்
மட்டுமே லட்சணம்
சுயநலம் அளவை மீறுகையில்
அவலட்சணம்!

எரியும் பிரச்சினை பற்றி அறிய விரும்பும்
சமூக பார்வை லட்சணம்
அதில் எண்ணை ஊற்றி வயப்படுத்தும்
கீழ்நோக்கு அவலட்சணம்!

பிரச்சினையின் பின்னல் தீர சிக்கல் உணர்ந்து
சீர் படுத்த சமூக நோக்கு லட்சணம்
இல்லாத சாதிப்பேயை ஏவிவிட்டு சந்தில் சிந்து பாடும்
சங்கங்களின் பாங்கு அவலட்சணம்!

தெரிந்தும் தெரியாமல் நடந்து கொள்ளும்
மேல்தட்டு மக்களின் மௌனமும்
அறிந்தும் அறியாமல் அல்லல் படும் வறுமைகோட்டு
கீழ்தட்டு மக்களின் இயலாமையும்
நடைமுறை வாழ்வினில் சிறிய லட்சணம்;

ஆனால் இதையே
மூலதனமாக்கி மூளைச்சலவை செய்து
காசுக்கும் பேச்சுக்கும் கூட்டம் சேர்த்து
பேரம் பேசி வாழ்க்கையையே வியாபாரமாக்கி
விட்டு விட்டது வெட்கங்கெட்ட அவலட்சணம்.

செய்ய வேண்டியவை (Do's) என்று சொல்லி சென்றவர்களின்
வார்த்தைகள் இங்கே காற்றில் கிடக்க,
செய்ய கூடாதவைகளை (Dont's) செவ்வனே செய்துவிட்டு
செல்வ செழிப்புடன் வாழ்ந்து கிடப்போர் இங்கிருக்க,

சாமுத்ரிகாலட்சணம் இழந்து சர்வலட்சனமும்
இன்று சகிக்கமுடியாது அலங்கோலமாய் போனது
யாரால்,

அரசியலால் அல்ல, அரசியலை லாபநோக்கிடும் வணிகரால்.
சாதியென்ற அடையாளத்தால் அல்ல,
அதை சதியாக்கி சுரண்டும் சுயநலக்கூட்டத்தால்.

"படைத்தான் ஒரு உலகம், பணம் தான் அதன் உருவம்"
படைத்தவன் மேல் பழியுமில்லை, பசித்தவன் மேல் பாவமுமில்லை

கடவுளின் வரங்கள் எல்லாம் காசுக்கு கிடைத்து விடுகையில் கடவுள் முன் கையேந்துவது கஷ்டமான வேலையில்லையே!

அறிவு, புகழ், பட்டம், பதவி எல்லாம் அடைந்து விடும்
மனிதனுக்கு காசே கடவுளாகிப்போனது!
காசு பணம் துட்டு எல்லாம்
வருமானம், வழிப்பறி இல்லை கூட்டுக்கொள்ளை
என்று வாழ விழையும் மனிதன்

திருந்தி வாழ்வது என்று,

கடவுள் எப்போதும் நல்லதே செய்வார் என்று நம்புவன் முன்
கடவுளால் கெட்டதும் செய்ய முடியும் என்றுணரும் நாள்வரும்வரை.

அது வரை
ஆடும்வரை ஆட்டம் தான்,
அவனாட்டம் தொடங்கும் வரை.

எழுதியவர் : செல்வமணி (20-Sep-15, 1:02 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 84

மேலே