கனவுகள்

ரோஜாவொன்று
நட்டுவைத்தவுடன்
திருப்தியாகிவிடும்
எம்கனவுகளுக்கு...

நெடிதுயர்ந்து நிற்கும்
மரக்கூட்டங்களை எழுப்பிய
எம்மூதையார்களின்
விசாலமனக்கனவுகள்
விளங்க மறந்ததேனோ...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (20-Sep-15, 8:01 am)
பார்வை : 939

மேலே