மழை நீரோடை காகிதக் கப்பல்

மழை நீரோடை
காகிதக் கப்பல்
சிறுவர்கள் உற்சாகம்
மூழ்கிவிடக் கூடாதே
என்ற அக்கறை !
சிறு கல்லில் தட்டி நின்றது
ஒரு கப்பல்
நீரின் வருகையில்
சுற்றிச் சுழன்று
சரிவினால் வேகம் பிடித்துச்
சென்றது
சிறுவர்கள் கைதட்டல் ஆரவாரம்
அப்பால் ..........
கப்பலுக்கு என்னவாயிற்று ?
ஏதாவது துறையை அடைந்திருக்கும்
கரையில் பயணிகளுக்காக காத்திருக்கும்
நன்னம்பிக்கை முனை
லண்டன் ,நியுயார்க் ..........
நம்புங்கள் !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-15, 9:42 am)
பார்வை : 148

மேலே