மின்னிசை

காற்றாலை பாடுது
தென்றல் கீதம்
கீதத்தில் பிறந்து வருது
மின் கவிதை !
#

சூரிய ஒளியில் மின்சாரம்
சுடச் சுட கீசரில்
வெந்நீர் நீராடல் !
#

மின் வலையில் கவிதை
எழுத்து எழுத்து எழுத்து
எழுது எழுது
இலவசம் இலவசம் இலவசம்
இது அழகிய தமிழ் சொர்க்கம் !
#
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-15, 10:21 am)
பார்வை : 73

மேலே