சைபர்
பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து
சைபர் சைபராக [வேறொன்றும் தெரியாது]
போட்டுக்காட்டும்
பண்ணையார் மகனின் சிலேட்டில்
பாரபட்சம் பார்க்காத
பரந்தாமன் வாத்தியாரும்
நூத்துக்கு சைபர் போட்டு அனுப்புவார்.
வருத்தப்படாத மாணவர் சங்கத்தின்
தலைவராக இருக்கும் பண்ணையார் மகன்
பெருமையுடன்
தந்தையிடம் சிலேட்டை காட்டுவான்.
குமரிமுத்து கணக்காய் சிரிக்கும் பண்ணையார்
மகனை கட்டித்தழுவி
''சைபருக்கு கீழே தாண்டா நூறு இருக்கு..
நீ தாண்டா எப்பவும் டாப்பு ''என்று கொஞ்சுவார்.
அன்னக்கைகள் காதுகளை பொத்திக்கொண்டே
''ஐயா சொல்றது தான் சரி '' என்பார்கள்.

